ஓசூர் அருகே கூட்டமாக திரியும் 100 காட்டு யானைகள் - விவசாயிகள் தவிப்பு

0 227

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் திரிவதால் கேழ்வரகு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதியில், கேழ்வரகு அதிக அளவில் பயிரிடப்பட்டு, அறுவடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், காட்டு யானைக்கூட்டங்கள் புகுந்துள்ளன. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவிலிருந்து 100 க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி தமிழக பகுதிக்குள் புகுந்துள்ளன.

இதில் 30 யானைகள் ஒருகுழுவாக சானமாவு வனப்பகுதியிலும், 50 யானைகள் மற்றொரு குழுவாக ஊடேத்துர்க்கம் பகுதியிலும் தஞ்சமடைந்துள்ளன.

கேழ்வரகு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால், யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் செல்போனில் படம்பித்தபோது யானை துரத்தியதால், வனப்பகுதிக்கு செல்வதையும், படம் பிடிப்பதையும் தவிர்க்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments