சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.180 வரை விற்பனை

0 404

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. சிறிய வெங்காயம் கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரியவெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரையும், சின்னவெங்காயத்தின் விலை கிலோ 170 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

சென்னை கொத்தவால் சாவடியில் பெரியவெங்காயம் கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும், சின்னவெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. மழைக் காலத்தில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து மிகவும் குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

120 லாரிகள் வரவேண்டிய இடத்தில் வெறும் 20 வெங்காய லாரிகள் மட்டுமே வருவதாகவும், அதிலும் தரமான வெங்காயம் மிகவும் குறைவு என்று தெரிவிக்கும் வியாபாரிகள், ஆன்லைன் வியாபாரிகள் வெங்காயம் பதுக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments