தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது

0 273

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்த இளங்கோ மணி என்பவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 200 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கார் ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கழனிவாசல் பகுதியில் சுற்றித் திரிந்த காரை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். விசாரணையில், காரில் இருந்த மதுரை ஆனையூர் அகதிகள் முகாமை சேர்ந்த அன்பு குமார், சதீஸ், சிவராஜன் ஆகியோர் நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த காவல்துறையினர் 120 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை  மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments