பரங்கிப்பேட்டையில் கடலில் இருந்து கரையொதுங்கிய கண்டெய்னரின் உடைந்த பாகம்

0 533

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில், கண்டெய்னரின் உடைந்த பாகம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார், நடத்திய ஆய்வில், ஜிபிஎஸ் கருவி மற்றும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு 70 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், கண்டெய்னரின் மற்றொரு பகுதி சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கரையொதுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் இலங்கையிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்றதாகவும், கடந்த 3ம் தேதி ஏற்பட்ட புயலில் 25 க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலில் விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த வாரத்தில் இரண்டு கண்டெய்னர்  கரை ஒதுங்கியதாகவும், இவை ஆஸ்திரேலியாவின் Safemarine என்ற நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments