சென்னை, திருவள்ளூரில் அதிகாலையில் பரவலாக மழை

0 440

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

ராயப்பேட்டை, மெரினா, அடையாறு, அமைந்தக்கரை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை தூறலாகத் தொடங்கிய மழை, பின்னர் மிதமாகப் பெய்தது.

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், எப்போது வேண்டுமாலும் மழை வலுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தணி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்துள்ளது.

இதனிடையே, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments