மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 94 ரன்கள் விளாசி விராட் கோலி அசத்தல்

0 501

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். எவின் லீவிஸ் 40 ரன்களும், ஹெட்மயர் 56 ரன்களும் சேர்த்தனர்.

20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. சஹால் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல்- கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கோலியுடன் களம் இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்கள் சேர்த்தார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்த கோலி கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments