என்கவுன்டர் கமிஷனர் சஜ்னர்..!

0 654

ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, போலீஸ் ஆணையர் சஜ்னாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக அவர் போலீசாரால் கொண்டாடப்படுகிறார்.

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற 4 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்னார் தலைமையிலான போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது நடவடிக்கைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். என்கவுன்டர் என்பது சஜ்னாருக்கு புதிது அல்ல. ஏற்கனவே இது போன்று பல வழக்குகளை அவர் எதிர்கொண்டுள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம், வாராங்கல் மாவட்டத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது 3 பேர் ஆசிட் வீசினர்.

அப்போது வாரங்கல் மாவட்ட எஸ்.பி.,யாக சஜ்னார் இருந்தார். குற்றம் நடந்த 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது நடந்தது போல், அப்போதும், ஆசிட் வீசப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகள் அழைத்து செல்லபட்டனர். அப்போது, குற்றவாளிகள், தங்களை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, தற்காப்புக்காக அவர்களை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

வாரங்கல் என்கவுன்டரை தொடர்ந்து, ஆந்திராவில் நக்சலைட்களுக்கு எதிரான என்கவுன்டர்கள் வேகம்பிடிக்க துவங்கின. 2009 மே மாதத்தில் வாரங்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சஜ்னார் நியமிக்கப்பட்ட உடன், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் உள்துறை அமைச்சர் மாதவ ரெட்டியை சுட்டு கொல்ல முயன்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பி.சுதாகர் ரெட்டி போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இப்போதும் சஜ்னாரின் தலைமையில் மற்றொரு என்கவுன்டர் நடைபெற்று உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments