முறையற்ற காதலுக்காக.. காவலர் வேடத்தில் கடத்தல் நாடகம்..!

0 425

தோழியின் கள்ளக்காதலுக்கு உதவுவதற்காக காவலர்களை போல் வேடமிட்டு பெண்ணை கடத்த முயன்ற 3 பெண்களை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கிஷோர் என்பவருக்கும், அவருடன் பணிபுரியும் வதனி என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

வதனிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கிஷோருக்கு மற்றொரு சக ஊழியரான சுபாஷினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த வதனி, தனது தோழி முத்துலட்சுமியின் உதவியை நாடியுள்ளார்.

சென்னை பாடி பகுதியில் அழகுநிலையம் வைத்திருக்கும் முத்துலெட்சுமியும் வதனிக்கு உதவ முடிவு செய்து, காவலர் போல் சுபாஷினிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் 2 பெண்களை தன்னுடன் சேர்த்து கொண்டு வெள்ளிக்கிழமை காலை வாடகை காரில் கிண்டி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார் முத்துலெட்சுமி.

தான் மட்டும் காரில் அமர்ந்து கொண்டு மற்ற இரு பெண்களையும் காரின் ஓட்டுநரையும், சுபாஷினியை அழைத்து வர அனுப்பியுள்ளார். அவர்கள் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரயில்நிலையம் வந்த சுபாஷினியை மறித்து விசாரணை நடத்த வேண்டும் என அழைத்துள்ளனர்.

சுபாஷினி வரமறுக்கவே, போலி பெண் காவலர்கள் இருவரும் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றதால் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்களும், ரயில்வே போலீசாரும் அவர்களை துரத்த துவங்கியதால், சுபாஷினியை விட்டு விட்டு தப்ப முயன்றுள்ளனர். 

காரை அடைந்த பெண்கள் இருவரும், அதிலிருந்த முத்துலெட்சுமியுடன் சேர்ந்து காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதே சமயம் வாடகை காரின் ஓட்டுநர் ஜீவனாந்தம் மட்டும் சிக்கிக் கொள்ள, கிண்டி காவல்நிலைய போலீசார் சுபாஷினி அளித்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நிஜ காவலர்கள் என நினைத்து தான் அழைத்து வந்ததாக கூறிய ஜீவானந்தம் அளித்த தகவலின் அடிப்படையில், போலி பெண் காவலர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தோழியின் கள்ளக்காதலுக்கு உதவுவதற்காக போலீசார் போல் வேடமிட்டு கடத்தலில் ஈடுபட முயன்றதை ஒப்புக்கொண்டதால், அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments