மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா

0 495

மத்திய அரசு, தாங்கள் கோரும் நிதி நிவாரணத்தை வழங்காவிட்டால், வோடபோன்-ஐடியாவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என, அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருக்கிறார்.

ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, நிலுவை வைத்திருக்கின்றன.

இதில், வேடபோன்-ஐடியா நிறுவனம் மட்டுமே, 53 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர, அதற்குண்டான நிலுவைத் தொகைக்கான வட்டி, அபராதம் ஆகியவற்றை உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன.

இவ்வாறு, மத்திய அரசு, தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில், குறிப்பிட அளவில் நிதி நிவாரணம் வழங்காவிட்டால், நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என வோடபோன்-ஐடியா தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments