பெண்ணை கடத்த முயற்சி - 3 பெண்களுக்கு வலை...

0 248

சென்னை கிண்டியில் ரயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பெண்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் நேற்று காலை தமது கணவரின் இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் வந்து இறங்கிய சுபாஷிணி என்ற ரயில்வே ஊழியரை வழிமறித்து தன்னை காவல்துறையை சேர்ந்தவர் என்று கூறிய ஜீவானந்தம் என்பவர் கணவர் அழைத்து வரச் சொன்னதாக கூறி அழைத்தார்.

ஆனால் கணவருடன் அந்தப்பெண் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை பறிக்க முயன்றதால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிண்டி ரயில் நிலைய நடைமேடையில் உள்ள தமது அலுவலகத்திற்கு செல்ல முயன்றார். அப்போது ஜீவானந்தமும் மற்றொரு பெண்ணும் ரயில்வே ஊழியரை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றபோது பொதுமக்கள் ஜீவானந்தத்தை பிடித்தனர்.

அந்த பெண் தப்பியோடி விட்டாள். ஜீவானந்தம் அளித்த தகவலின் பேரில் அவர் நண்பரான பாலகுரு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பெண் ஆய்வாளர் என கூறிக்கொண்ட ஒருவர் திருட்டு வழக்கில் கிண்டியில் ரயில்வே ஊழியரை கைது செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் அதனால் அவரை பின்தொடர்ந்து வந்து மற்றொரு பெண்ணின் உதவியுடன் ரயில்வே ஊழியரை அழைத்துச் செல்ல முயன்றதாகவும் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட மேலும் சிலரை தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் ஜீவானந்தமிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments