குடிபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் கைது

0 250

சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டிய புகாரில், சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 27 ஆம் தேதி அந்த ஹோட்டலுக்கு சென்ற சினிமா விநியோகஸ்தரான பிரவீன், அவரது நண்பர் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், மது அருந்திய பின் அவர்களுக்காக பணம் செலுத்த வற்புறுத்தி ஹேம்நாத் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த கும்பலின் பிடியிலிருந்து ஹேம்நாத் தப்பிய நிலையில், புகார் குறித்து விசாரித்து வந்த போலீசாருக்கு, சம்பவம் நடந்த நட்சத்திர ஹோட்டலிலேயே அந்த நபர்கள் தங்கியிருந்த தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற அவர்கள், சினிமா விநியோகஸ்தர் பிரவீன் மற்றும் சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments