நான் சைவம்.. வெங்காய விலை உயர்வு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது- மத்திய அமைச்சர்

0 440

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வை விட வெங்காய விலை உயர்வு பற்றி பேசாதவர்களே இல்லை.

ஆனால் வெங்காய விலை உயர்வு பற்றி தனக்கு எதுவுவுமே தெரியாது என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு நகரங்களில் கிலோ 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வெங்காய விலையை குறைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது தான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்பதால், என் வாழ்நாளில் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்றார்.

ஆகையால் எனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தாம் ஒரு சைவ உணவுப்பிரியர் எனக்கு எப்படி வெங்காய விலை உயர்வு பற்றி தெரியும் என, மத்திய அமைச்சர் ஒருவரே கேள்வி எழுப்பியது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments