ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி குயின் வெப் சீரிஸின் டீசர் வெளியீடு

0 422

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள குயின் என்ற வெப் சீரிஸின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன், கிடாரி புகழ் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளிவரவுள்ள குயின் வெப் சீரிஸில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். தற்போது வெளியான குயின் வெப் சீரிஸின் 2 நிமிட டீசரில் ஜெயலலிதாவின் படிப்பு, நடிப்பு, அரசியல் பிரவேசம் என அவரின் பன்முகத்தன்மை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்ற வசனம் கைதட்டலை பெறும் வகையில் அமைந்துள்ளது. குயின் வெப் சீரிஸ் டிசம்பர் 14ம் தேதி பல மொழிகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments