ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது குழந்தை மீட்பு

0 2882

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பணி மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

சிரோஹி மாவட்டத்தின் சிபா கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயதே ஆன சிறுவன், அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். அவனது அலறல் குரல் கேட்டு ஓடி வந்த பெற்றோரும், அருகில் இருந்தவர்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட உதவி ஆட்சியர் பகிரத் சவுத்ரி தலைமையில் விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆழ்குழாய் கிணற்றில் 15 அடியில் சிக்கி இருந்த சிறுவனுக்கு ஆக்சிஜனும், தண்ணீரும் அளிக்கப்பட்டது. அந்த கிணற்றுக்கு அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments