மக்களின் முழு எதிர்ப்பை திமுகவினர் சம்பாதித்துள்ளார்கள் - ஜெயக்குமார்

0 434

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் நிலையில், தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி சாலையில், அன்னதானம் வழங்கும் விழாவை அவர், தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததன் மூலம், மக்களின் முழு எதிர்ப்பை திமுகவினர் சம்பாதித்து உள்ளது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments