சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

0 278

சென்னை ஆலந்தூரில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணடியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது அந்தக் காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, கிண்டி, ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் இருந்து, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனால், அப்பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments