செல்போனால் கழுத்துக்கு நேரும் ஆபத்து.. தப்பிக்கும் வழி இதோ..!

0 917

15 வருடங்களுக்கு முன்பெல்லாம் கழுத்து வலி என்பது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வரக்கூடிய வியாதியாக இருந்தது. ஆனால் தற்போதோ டீன் ஏஜ் பருவத்தினர் கூட கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர்.

தவிர அலுவலகம் செல்லும் இளைய தலைமுறையினரும் கழுத்து வலி என கூறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதெற்கெல்லாம் முக்கிய காரணங்களாக இருப்பது ஆறாவது விரல் எனப்படும் ஸ்மார்ட் மொபைல் போன்களும், டிஜிட்டல் மயத்திற்கு மூலமான கம்ப்யூட்டர்களும் தான்.

கணினி பயன்பாடு:

கழுத்து வலி ஏற்பட முக்கிய காரணம் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். தசைகள் சோர்வடைவதால் கழுத்தை அவற்றால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அலுவலக வேலை என்றால் கம்ப்யூட்டர் இல்லாமல் இல்லை.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை அசையாமல் கம்ப்யூட்டர் முன் அமர்வது கழுத்து வலிக்கு அடித்தளமாகிறது.

மொபைல் பயன்பாடு:

நம் மற்ற விரல்களை தினமும் பார்க்கிறோமோ இல்லையோ, ஆறாம் விரலான செல்போனை பார்க்காத நிமிடம் இருக்காது. நாம் தொடர்ந்து பயன்படுத்தும் மொபைல் போன்களாலும் கழுத்து வலி ஏற்படுகிறது. பெரும்பாலும் நாம் மொபைல் பயன்படுத்தும் போது குனிந்த தலை நிமிருவது இல்லை. கழுத்தை குனிந்து கொண்டே தொடர்ந்து பயன்படுத்தும் போது வலி துவங்குகிறது. தவிர அதில் கேம்ஸ் விளையாடுவதால் சிறுவர்கள் கூட கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர்.

பரவும் வலி:

கழுத்து வலி முதலில் கழுத்தில் உணரபட்டாலும் முதுகு எலும்பு பிரச்னைகளாலும் ஏற்படலாம். கழுத்து, மேல் முதுகு இரண்டிலும் தசை இறுக்கம் அல்லது முதுகெலும்பிலிருந்து வெளிப்படும் நரம்புகளை ஜவ்வு அழுத்துவதன் காரணமாக கழுத்து வலி ஏற்பட்டு வலி பரவும்.

image

தவிர்ப்பது எப்படி:

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்படுத்தும் போது தலையை நேராக வைத்து கொண்டு கண்ணிற்கு நேரே வைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் தசைகள் இறுக்கத்தை குறைக்க, அதனை தளர்வடைய செய்யும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது முதுகெலும்பு மற்றும் கழுத்தை வளைத்து உட்காராமல் சரியான நிலையில் அமர வேண்டும்.

கம்ப்யூட்டரில் நீங்கள் அமரும்போது உங்கள் கால்களை தரையில் படும்படியும் உங்கள் காதுகள் இரண்டும் தோள்பட்டைக்கு நேராக இருக்குமாறும் தலையை வைத்துக் கொள்ளுங்கள்.முதுகை வளைத்து கம்ப்யூட்டர் முன்பு, முகத்தை நீட்டியவாறும் உட்கார கூடாது.

மிக முக்கிய குறிப்பு: உங்கள் உடல் நலத்தை உங்களை தவிர யாராலும் பேண முடியாது. எனவே எதுவாக இருந்தாலும் அளவாக பயன்படுத்துங்கள். சரியான நிலையில் கழுத்தையும்,முதுகையும் வைத்து உட்காருங்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments