செல்வமகள் சேமிப்பு திட்டம்... முதலிடத்தில் தமிழ்நாடு..!!

0 657

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ, பாதுகாவலரோ அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்

பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி மாதம் ரூபாய் 100 முதல் செலுத்தி வந்தால் ஆண்டுக்கு 8.3 சதவீத வட்டியுடன் 21 வருடம் கழித்து முதிர்வுதொகையை பெறும் திட்டம் கடந்த 2014 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இதில் பெண்ணின் 18ஆவது வயதில் படிப்பு செலவிற்காக சேமிப்பு தொகையில் 50 விழுக்காடு தொகையினை பெற்றுக் கொள்வதுடன், திருமணத்தின் போது கணக்கை முடித்து கொள்ளவும் முடியும்.

இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 18 லட்சத்து 72 ஆயிரத்து 873 கணக்குகள் தொடங்கப்பட்டு 3 ஆயிரத்து 666 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு, 16,64,649 கணக்குகள் உள்ளது. மூன்றாம் இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு, 13,98,411 கணக்குகள் உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments