ஹாலிவுட் 2019 - மகத்தான வெற்றிகளும் ,எதிர்பாராத தோல்விகளும்...!

0 89

இந்த ஆண்டில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள், அவற்றில் மகத்தான வசூல் வெற்றிகள், எதிர்பாராத தோல்விகள், வர இருக்கும் புதிய ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

2019ம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்ஸ் எனப்படும் மகத்தான வசூல் சாதனை புரிந்த ஹாலிவுட் படங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. வால்ட் டிஸ்னிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாகும். இந்த ஆண்டில் 5 படங்களை தயாரித்து வெளியிட்ட டிஸ்னிக்கு நான்கு படங்கள் மகத்தான வசூலை வாரிக்குவித்துள்ளன.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம், இதில் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் இந்தப் படம் சுமார் 2 புள்ளி 8 பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.
இதே போல் லயன் கிங், கேப்டன் மார்வெல், டாய் ஸ்டோரி 4 ஆகிய படங்களும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கும் மார்வெல் ஸ்டூடியோசுக்கும் இந்த ஆண்டின் வசூலைக் குவித்த படங்களாக விளங்குகின்றன.

அண்மையில் வெளியான புரோசன் 2 படமும் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது.இதே போல் ஆஸ்கர் விருது பெற்ற படங்களும் இந்த ஆண்டில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படங்களாக விளங்குகின்றன. கான்ஸ் திரைப்பட விழா, கோல்டன் பேர் விருது பெற்ற படங்கள் போன்றவையும் இந்த ஆண்டு திரையுலகிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளன.

ஆயினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி வசூலில் பின்னடைவை சந்தித்து பிளாப் ஆனது.
இதே போல் ஹோம்ஸ் அன்ட் வட்சன் , கி கோல்ட் பின்ச் போன்ற படங்களும் இந்த ஆண்டின் மிக மோசமான படங்களுக்கான razzie விருதுகளை பெற்றன.200 மில்லியன் டாலர் செலவில் உருவான டார்க் பீனிக்ஸ் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது.

காமிக்ஸ் கதையிலிருந்து திரைவடிவம் பெற்ற ஜோக்கர் படம் நவம்பரில் உலக வசூலில் 1 பில்லியன் டாலராக இருந்தது. இந்தப் படம் சீனாவில் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் பெரும் விளம்பரத்துடன் இந்தப்படம் வெளியானது. cats படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் டிரைலர் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. வால்ட் டிஸ்னி 2020ம் ஆண்டில் சிண்ட்ரெல்லா , பியூட்டி அன்ட் தி பீஸ்ட் போன்ற படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் பாண்ட் 25 படத்தின் படத்தலைப்பு நோ டைம் டூ டை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படங்கள் புத்தாண்டில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments