"ஏற்கனவே கண்டறிந்துவிட்டோம்" நாசா அறிவிப்புக்கு இஸ்ரோ மறுப்பு

0 3487

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை, தமிழரின் ஆய்வு மூலம் நாசா கண்டுபிடித்து அறிவிக்கும் முன்பே, இஸ்ரோ கண்டறிந்துவிட்டதாக, அதன் தலைவர் சிவன் கூறியிருக்கிறார். 

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. சந்திரயான் 2 விண்கலம் மூலமாக செலுத்தப்பட்ட ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டது.

இதேபோன்று, 2009ஆம் ஆண்டு அனுப்பிய தனது ஆர்ப்பிட்டர் மூலமாக, நாசாவும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயன்று வந்தது. இந்நிலையில், நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய சந்திரயான் இரண்டின் விக்ரம் லேண்டர் பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் கண்டுபிடித்ததாக அறிவிப்பு வெளியானது. இதனை நாசாவும் உறுதிப்படுத்தி அறிவித்தது.

ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை, சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ஏற்கனவே, நாம் கண்டுபிடித்துவிட்டதாகவும், நாசாவின் அறிவிப்பு புதிது அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி டுவிட்டர் பக்கத்திலும், இஸ்ரோ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும், யார் வேண்டுமானாலும், அதனை காணலாம் என்றும், இஸ்ரோ தலைவர் சிவன் உறுதிபடக் கூறியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments