எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு-நாளை விசாரணை

0 191

எட்டு வழி பசுமைச்சாலைத் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையிட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

இத்திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையேற்ற நீதிபதிகள் புதிய மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments