அந்தமான் தீவுப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனக்கப்பல்

0 470

இந்தியக் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டதாக கப்பற்படைத் தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

கப்பற்படை தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் அருகே, சீனாவின் ஷி யான் 1 என்ற சீன ஆராய்ச்சி கப்பல், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இதனை, அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த, இந்திய கடலோர பாதுகாப்பு கண்காணிப்பு விமானம் கண்டுபிடித்ததாகக் கூறிய அவர், இந்தியக் கடற்படை சார்பில் கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் சீனக் கப்பல் அங்கிருந்து சென்றதாகக் கூறினார். அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் செயல்படுவதால் அப்பகுதியில் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments