இந்திய வீரர் வீராங்கனைகள் தெற்காசிய போட்டியில் சாதனை...!

0 199

காத்மாண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 18 தங்கம் உட்பட 43 பதக்கங்களை வென்றுள்ளது.

13வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளம் நாட்டிலுள்ள காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா சுசிந்திரன் 100 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் தடகளப் போட்டியில் 4 நிமிடம் 34.51 நொடிகளில் (4.34.51s) கடந்து டெல்லி வீராங்கனையான சந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் கேரளாவை சேர்ந்த பி.யூ.சித்ரா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெஹுலி கோஷ் (MEHULI GHOSH) 253.3 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதே போன்று இந்தியாவை சேர்ந்த ஸ்ரீயங்கா சாரங்கி (sriyanga saarangi) வெள்ளி பதக்கத்தையும், ஷ்ரேயா அகர்வால் (SHREYA AGARWAL) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா அணி தங்க பதக்கத்தை பெற்றது.

ஆண்களுக்கான 50மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், செயின் சிங் (CHAIN SINGH) தங்கப்பதக்கத்தையும், அகில் சிரோன் (AKHIL SERON) வெள்ளி பதக்கத்தையும் வென்றார். 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் யோகேஷ் சிங் (YOKESH SINGH) மற்றும் குர்பிரீத் சிங் (GURPREET SINGH) தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். அதே போன்று இந்தியா அணி 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. ஆடவர் பிரிவில் பாகிஸ்தானையும், மகளிர் பிரிவில் நேபாளத்தையும் இந்திய அணி வீழ்த்தியது.

பெண்களுக்கான டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த காஷிஷ் மாலிக் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற நிலையில், ராதா பட்டி பெண்களுக்கான 46 கிலோ பிரிவிலும், கன்கா மைனாலி ஆண்களுக்கான 54 கிலோ பிரிவிலும், ப்ரிதீவ் ராஜ் சவான் ஆண்களுக்கான 68 கிலோ பிரிவிலும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

2வது நாள் முடிவில் இந்தியா 18 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என 43 பதக்கங்களை பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments