கர்நாடக மாநில இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

0 234

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம்  ஓய்ந்தது.

அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் முடிவு மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரச்சாரம்  ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
15 தொகுதிகளில் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வருகிற 5-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments