மகளிருக்கு எதிராக வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்

0 153

பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், நாட்டில் பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள் என்றார். தாயை தெய்வம் என்று பேணிக் காப்பது நம் கலாசாரம் என்ற அவர், தினம் தினம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்றார்.

இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடப்பதாகவும், பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர், அந்த பிள்ளை சொன்ன நேரத்திற்கு வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால் பதற்றமடைகிறார்கள் என்றும் கூறினார். அவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற வைகோ, இது போன்ற சம்பங்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கட வேண்டும்,” என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments