மாணவர்களுக்கான மதிய உணவில் இறந்து கிடந்த எலி

0 431

உத்திரபிரதேசத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஹபூர் நகரை சேர்ந்த ஜன் கல்யான் சன்ஸ்தா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்து தரும் உணவு  வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டபோது உணவில் எலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே இந்த உணவை உண்ட 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முசாபர் நகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments