"தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலனை"- நிர்மலா சீதாராமன்

0 406

தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார்.

மக்களவையில், பெருநிறுவன வரி விகித மாற்றம் தொடர்பான சட்டத்திருத்த மசாதோ மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

வளர்ந்த, வளரும் நாடுகளின் உள்ள வரிமுறைகளை கணக்கிட்டு, உள்நாட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க கோருவது என்பது சரியாக இருக்காது என்றும், அவை வேறு, நமது நாட்டின் வரிமுறைகள் வேறு என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்நிய முதலீடுகளை ஈர்த்து, நாட்டின் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், கார்ப்ரேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், அவற்றை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இவற்றை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும்,  நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments