மேட்டுப்பாளையம் விபத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவேண்டும் - ஸ்டாலின்

0 443

மேட்டுப்பாளையத்தில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், பலவீனமாக இருந்த சுவரை அதிகாரிகள் ஏற்கெனவே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய விபத்து நடந்திருக்காது என தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என தெரிவித்த அவர், அப்பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளை அரசு கட்டித்தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments