ராக்கெட் பாகத்திலிருந்து மாயமான பொருள்... மீனவர்களிடம் விசாரணை...!

0 666

புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட்டின் உதிரி பாகத்தை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

வம்பா கீரப்பாளையம் பகுதி மீனவர்களின் வலையில் சிக்கி கரைக்கு கொண்டுவரப்பட்ட ராக்கெட் உதிரி பாகத்தை இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சேதமடைந்த வலைகளுக்கும் படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அது தொடர்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மீனவர்கள் சமாதானம் ஆனதை அடுத்து ராக்கெட் பாகத்தை இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments