கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

0 515

கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வேலாயுதம்பாளையம் அடுத்த புகழுரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பல கிராமங்களுக்கு மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து செல்லும் மின் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்மாற்றி தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

நான்கு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ரசாயன கலவை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments