பிலிப்பைன்ஸை புரட்டிய கம்முரி புயல்: 155 கி.மீ முதல் 190 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று

0 240

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த கம்முரி புயலால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

நாட்டின் மத்திய பகுதியான Daete-யை நேற்று இரவு தாக்கிய சூறாவளி புயல், மணிக்கு, 155 கி.மீ முதல் 190 கி.மீ வரை வீசியதால், வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன.

இதனால் அப்பகுதியில் குடியிருந்த 90 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சூறாவளி புயலான கம்முரி, இன்று பிற்பகலுக்குள் தலைநகர் மணிலா வழியாக, மேற்கு கடற்கரை நோக்கி செல்லும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து, மணிலாவில் உள்ள Aquino சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

சூறாவளி கம்முரி காரணமாக மத்திய பிலிப்பைன்ஸில், லூசன் தீவின் தெற்கு முனையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், புயல் தாக்கம் மற்றும் நிலச்சரிவு குறித்த அச்சத்தின் காரணமாக சுமார் 2,00,000 குடியிருப்பாளர்கள் கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் சனிக்கிழமை துவங்கிய தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சில நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 சூறாவளிகளால் பிலிப்பைன்ஸ் நாடு பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments