தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை

0 690

மிழ்நாட்டில், சென்னை புறநகர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.. 

சென்னை பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 8 மணியளவில் கனமழை பெய்தது. மேலும், புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மிதமான மழை பதிவானது. மழையை பொருட்படுத்தாமல், குடைபிடித்தபடியும், ரெயின்கோட் அணிந்தபடியும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில், நேற்று இரவிலிருந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில், அவ்வப்போது, கனமழை கொட்டித்தீர்க்கிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டடுள்ளது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, நேற்று முதல் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நேற்று இரவு பெய்த மழையில் ராட்சத பாறை ஒன்று சரிந்து அந்த சாலையில் விழுந்துள்ளது, ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பாறையை உடைக்கும் இயந்திரங்களையும் அதனை அகற்றுவதற்காக பொக்லைனையும் கொண்டு பணிகளை துவக்கியுள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாறையின் அளவு பெரியதாக இருப்பதாலும் அதனை அகற்றும் பணி நாள் முழுவதும் நடக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழியாக வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் மதகு ஒன்று உடைந்து, இரைச்சலுடன் தண்ணீர் பாய்கிறது. 300 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களுக்குள் ஏரி நீர் புகுந்து வருவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வந்தவாசி கோட்டாட்சியர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், காலைப்பொழுதில், கருமேகங்கள் சூழ்ந்த காணப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரம், மிதமானது முதல் கனமழைப் பதிவானது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தென்னேரி நிரம்பி, கலங்கல் வழியாக, அதிகப்படியான உபரி நீர் பெருக்கெடுத்தோடுகிறது. வாலாஜாபாத்-சுங்குவார் சத்திரம் சாலையில், மஞ்சமேடு தரைப்பாலத்தில், தென்னேரி உபரிநீர் பாய்வதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால், அதனையொட்டி, தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்னேரி உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதியில், சிறுவர்களும், இளைஞர்களும், நீராடி மகிழ்ந்தனர். 

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் 5வது நாளாக தடை விதித்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் ,வடகரை, புளியரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் தடுப்புகளைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்டவற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டடுள்ளது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, நேற்று முதல் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நேற்று இரவு பெய்த மழையில் ராட்சத பாறை ஒன்று சரிந்து அந்த சாலையில் விழுந்துள்ளது, ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பாறையை உடைக்கும் இயந்திரங்களையும் அதனை அகற்றுவதற்காக பொக்லைனையும் கொண்டு பணிகளை துவக்கியுள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாறையின் அளவு பெரியதாக இருப்பதாலும் அதனை அகற்றும் பணி நாள் முழுவதும் நடக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழியாக வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, பெருந்துறை,சென்னிமலை,காஞ்சிகோயில்,விஜயமங்கலம், பவானி,அந்தியூர், குண்டேரிபள்ளம்,வரட்டுபள்ளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்தும் 11 ஆயிரத்து 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 2வது நாளாக விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள தலையணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாங்குநேரி வட்டாரத்திலுள்ள மேலபத்தை, மஞ்சுவிளை, மாடன்குளம், பாப்பான்குளம், பிரவான்குளம், முங்கிலடி குளம், மலையநேரி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. இப்பகுதியிலுள்ள விவசாயிகளும் நாற்று நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 3 நாட்களாக பெய்த கனமழையால் குடிசைகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. தங்கச்சிமடம் ஐயன் தோப்பு, விக்டோரியா நகர், ராஜா நகர்,ராஜீவ்காந்திநகர் பகுதிகளில் மழைநீரோடு சாக்கடை நீரும் கலந்து குடிசைகளுக்குள் புகுந்துள்ளது. முழங்கால் அளவு தண்ணீர் நிற்பதால் அங்கு வசிப்பவர்கள் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள் பெரும்பாலானவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. புழுக்கள் நிறைந்த சாக்கடை நீரால் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments