இந்தோனேசியாவின் தேசிய நினைவுசின்ன பூங்காவில் வெடிவிபத்து

0 168

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், குடியரசு தலைவர் மாளிகை அருகே, தேசிய நினைவுச்சின்ன பூங்காவில், கையெறி குண்டுபோன்ற பொருள் வெடித்துச் சிதறியதில், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

அதிபர் மாளிகை அருகே இருப்பதால், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கையெறி குண்டு போன்ற பொருள் கிடந்ததை 2 ராணுவ வீரர்கள் பார்த்துள்ளனர்.

அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் ராணுவ வீரர் ஒருவர் கையில் எடுத்தபோது, வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது, அருகிலிருந்து ராணுவ வீரருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments