10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

0 274

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வேயின் இயக்க விகிதத்தில் 100 ரூபாய் சம்பாதிப்பதற்கு 98 ரூபாய் 44 காசுகளை ரயில்வே செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சேவையை ரயில்வே துறையால் சரிவர பூர்த்தி செய்யமுடியவில்லை என்று தெரிவித்துள்ள சிஏஜி,இழப்பை ஈடுகட்ட சரக்கு போக்குவரத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. எனவே ரயில்வே துறை தனது வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments