திருவொற்றியூரில் போலி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பணமோசடி

0 274

சென்னை திருவொற்றியூரில்  கோடிக்கணக்கில் பணமோசடி செய்த நபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அரும்பாக்கத்தில், ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் என்ற தனியார் நிறுவனத்தைத் தொடங்கிய வெங்கடேசன்- சையது உள்ளிட்ட 6 பேர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.

முதலீடுத் தொகை 100 நாட்களில் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை காட்டியுள்ளனர். இதனை நம்பி 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் 5 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். 3 மாதங்களில் கோடிக்கணக்கில் வசூல் செய்த இவர்கள், தனது நண்பர்களுடன் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், நிதி நிறுவனத்தை நடத்திய 6 பேரில் ஒருவரான ஹரிஷ்வர் என்பவர் திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு ஹரீஷ்வர் வீட்டை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர்.

இதையடுத்து, தன்னை சிலர் மிரட்டுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஹரீஷ்வர் தகவல்தெரிவித்தை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிப்பதற்காக ஹரீஷ்வர் திருவொற்றியூர் காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து காரில் ஏறி செல்ல முயன்ற போது பாதிக்கப்பட்டவர்கள் அந்த காரை விரட்டி பிடித்து ஹரீஷ்வரை போலீசில் ஒப்படைத்தனர்.தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments