இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

0 200

இ சிகரெட்டுகள் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இ சிகரெட்டுக்கள் ஆபத்தில்லாதவை என்று ஆரம்பத்தில் கருதப்பட்டாலும் சாதாரண சிகரெட்டுகளுக்கு இணையான தீங்கு கொண்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்நிலையில் இ சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா கடந்த நவம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநிலங்களவையில் இந்த மசோதா கடந்த தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு பின் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இ சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, கையிருப்பு போன்ற அனைத்து அம்சங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இ சிகரெட் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும், தடையை மீறினால் ஒரு ஆண்டு சிறைதண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் மசோதா வகைசெய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments