பிரியங்காவுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

0 174

சோனியா மகள் பிரியங்காவின் வீட்டுக்குள் பாதுகாப்பை மீறி 7 பேர் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள பிரியங்கா மற்றும் அவரது வீட்டுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்தப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரம் 3 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கிய குடும்பத்தினர் பிரியங்காவின் வீட்டருகே சர்வ சாதாரணமாக வந்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பிரியங்காவுடன் பேசி புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து பிரியங்காவுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என அவரது உதவியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments