6வது முறையாக தங்கப் பந்து விருதை தட்டி சென்ற மெஸ்சி

0 290

6வது முறையாக தங்கப் பந்து விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தட்டி சென்றார். கடந்த 1956ம் ஆண்டு முதல் ஆண்டுந்தோறும் பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் தங்கப் பந்து விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான தகுதியான வீரரை கால்பந்து பத்திரிகையாளர்கள் குழு தேர்வு செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தங்க பந்து விருதை அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய 5 ஆண்டுகள் அவர் இந்த விருதை பெற்றுள்ள நிலையில், தற்போது 6வது முறையாக இந்த விருதை பெற்றதன் மூலம் 5 முறை தங்கபந்து விருதை பெற்றிருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்து அதிகமான தங்கப் பந்து விருதை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments