இருசக்கர வாகனத்தின் பின்னால் பயணிப்போருக்கும் ஹெல்மட் அவசியம்-கேரளா

0 253

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்போரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹெல்மட் அணியாமல் பயணிப்போரிடம் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments