நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்திற்கு வாய்ப்பு இல்லை, மத்திய அமைச்சர் திட்டவட்டம்

0 136

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர்,அனைத்து பள்ளிகளின் பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை மேம்படுத்த வழிகாட்டவும், உத்தரவு பிறப்பிக்கவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த கவுன்சில் தேசிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக கூறிய அவர், கல்வி அரசியல் சாசனத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்தாலும், பெரும்பான்மையான பள்ளிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்றார்.

எனவே தேசிய பாடத்திட்டத்தில் உள்ள சீரான பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments