நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 750 உயர்வு.. மத்திய அமைச்சர் தகவல்

0 207

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்து 226ல் இருந்து 2ஆயிரத்து 976-ஆக அதிகரித்துள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது புலிகளின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புலிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 226 ஆக இருந்தது என்றும் தற்போது 750 அதிகரித்து 2 ஆயிரத்து 976-ஆக உள்ளது என்றும் கூறினார்.

நமது சுற்றுச்சூழல் மண்டலத்தை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்று கூறிய அவர்,சிங்கம், புலி, யானைகள், காண்டாமிருகம் ஆகியவை இந்தியாவின் அளப்பரிய சொத்துகள் என்று கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் 2007 மற்றும் 2017-ஆம் ஆண்டின் மதிப்பீடுகளுக்கு இடையில் நாட்டின் புவியியல் பரப்பளவு 17,374 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. மேற்கண்ட பத்து ஆண்டு காலத்திற்குள், 2015 மற்றும் 2017 மதிப்பீடுகளுக்கு இடையில் வனப்பகுதி 6,788 சதுர கி.மீ அதிகரித்துள்ளதாக ஜவடேகர் கூறினார்.

மேற்கு வங்கம், பிரிக்கப்படாத ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வனப்பகுதியை அதிகரித்த முதல் மூன்று மாநிலங்களில் அடங்கும். தற்போதைய மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த வனப்பகுதி 7.08 லட்சம் சதுர கி.மீ. இது புவியியல் பரப்பளவில் 21.54 சதவீதம்.

அதே போல நாட்டின் மரங்களின் பரப்பளவு 93.81 சதுர கி.மீ . இது புவியியல் பகுதியின் 2.85 சதவீதமாகும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments