கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்வதில் இரு கட்சியினரிடையே மோதல்

0 196

ஆந்திராவில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்வதில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அப்பகுதியில் குழுமியிருந்தனர்.

அப்போது முந்தைய தெலுங்கு தேச கட்சி ஆட்சியில், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பல முறைகேடுகள் செய்யப்பட்டதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். தெலுங்கு தேசம் நிர்வாகிகள் பணத்தை தங்களது கணக்கில் போட்டு கையாடல் செய்தது உள்ளிட்ட பல முறைகேடுகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். 

இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் நாற்காலிகளை வீசியடித்து சண்டையில் இறங்கினர்.இந்த மோதலில் இரு கட்சிகளையும் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். நடந்த நிகழ்வுகள் குறித்து ஸ்ரீகாக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments