பாலியல் வன்கொடுமை எதிரொலி-ஆபத்துகால போன் கால்களுக்கு 7 வினாடிகளில் பதில்

0 325

தெலங்கானாவில் பிரியங்கா ரெட்டி சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்துக் காலங்களில் அழைக்கப்படும் போன் கால்களுக்கு 7 வினாடிகளில் பதிலளிக்கப்படும் என பெங்களூரு காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் என்ற பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு மருத்துவரை ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தீயிட்டு கொளுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஆபத்து காலங்களில் அழைக்கப்படும் போன் கால்களுக்கு, 7 வினாடிகளில் பதிலளிக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் உறுதியளித்தார்.

இதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிப்பதுடன், உடனடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பெங்களூரு பெண்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், தங்கள் பாதுகாப்பு குறித்து, எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments