அஞ்சல் அட்டை அளவு புகைப்படம்...நீட் தேர்வில் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை...!

0 398

நீட் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க வழக்கமான மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், அஞ்சல் அட்டை அளவிலான புகைப்படத்தையும் சேர்த்து இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நடக்கவுள்ளன. இதற்காக நேற்று தொடங்கிய ஆன்லைன் முன்பதிவு வருகிற 31ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஜனவரி 15ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மாணவர் மற்றும் மாணவிகள் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து சர்ச்சை எழுந்ததால், வரும் ஆண்டில் ஹிஜாப், புர்கா, காரா மற்றும் கிர்பான் போன்ற கலாச்சார ஆடைகள் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அத்தகைய மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு மற்றவர்களை விட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விடவும் அறிவுறுத்தப்பட உள்ளனர்.

இதேபோல் மாணவர் ஏதேனும் மருத்துவ உபகரணங்களை தன்னுடன் எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயக் சூழல் நேர்ந்தால் அனுமதிச் சீட்டு பெறுவதற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க மாணாக்கரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அஞ்சல் அட்டை எனப்படும் போஸ்ட் கார்ட் அளவுள்ள படத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மாணவரின் 10 மற்றும் 12ம் வகுப்புகளின் அனைத்து சான்றிதழ்களும் சரி பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்கும் நீட் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21ம் ஆண்டுக்கான நீட் தேர்வுகள் முதன்முறையாக அனைத்து மொழிகளிலும் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி பாடத்திட்டத்திலோ தேர்வு முறையிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments