தூக்கத்தால் வந்த வினை ஆம்னி பேருந்து உருண்டது..!

0 739

ளுந்தூர்பேட்டை அருகே எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததால் பலர் காயமடைந்தனர். தூங்கி விழுந்த ஓட்டுனரால் பள்ளத்தில் உருண்ட பேருந்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்தை நாகர்கோவிலைச் சேர்ந்த சத்யராஜ் பாபு என்பவர் ஓட்டினார். நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் கண் அசந்ததால் தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்ட நிலையில் ஓட்டுனர் சத்யராஜ் பாபுவுக்கு பின்பக்கத்தில் கண்ணாடி வெட்டியதால் பலத்த காயம் அடைந்தார். ஓட்டுனர் மற்றும் காயம் அடைந்த பயணிகள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுனர் கடந்த 10 தினங்களாக சபரிமலைக்கு சுற்றுலா பேருந்து ஓட்டியதாகவும் , இந்த பேருந்தின் ஓட்டுனர் வராததால் கூடுதல் பணி வழங்கப்பட்ட நிலையில் பேருந்தில் தூங்கி விழுந்து பேருந்து பள்ளத்தில் கவிழ காரணமாகிவிட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால் தான் ஒரு நாள் ஓய்வுக்கு பின்னர் வாகனத்தை இயக்கியதாக ஓட்டுனர் சத்தியராஜ் பாபு சமாளித்தார்.

தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தாங்கள் கொள்ளை லாபம் சந்திக்க வேண்டும் என்பதற்காக ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வு இல்லாமல் பணி செய்ய நிர்பந்திப்பதால் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதாக காவல்துறையினர் சுட்டிகாட்டினர்.

ஆம்னி பேருந்துகளுக்கு வேககட்டுப்பாட்டை விதித்து, ஓட்டுனர்களின் பணி நடைமுறைகளை வரைமுறைபடுத்தினால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments