இனிமேல் இப்படித்தான்.. ஹீரோவானார் அண்ணாச்சி..!

0 724

மிழ் திரை உலகில் நிலவி வரும் கதாநாயகர்கள் பஞ்சத்தை போக்கும் விதமாக சரவணாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தமிழ் திரை உலகில் புதிய நாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார்.

பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமாரை தொடர்ந்து கமல், ரஜினி என ஒவ்வொருவராக அரசியல் பக்கம் செல்வதால் தமிழ் திரைஉலகில் மிடில் ஏஜ் கதாநாயகர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப லெஜண்ட் சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் களம் இறங்கி உள்ளார்.

மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா... என்று ஆவலாய் கேட்கும் அளவிற்கு தமிழ் திரை உலகிற்குள் லெஜண்ட் சரவணன் என்ற பெயரில் அறிமுக நாயகனாக அடியெடுத்து வைக்கிறார் நம்ம அண்ணாச்சி, ..!

தனது கடை விளம்பர படத்தில் பல கோடிகளை கொட்டிக் கொடுத்து ஹன்சிகா,தமன்னாவுடன் பிரபல நாயகர்களை ஜோடியாவதை தடுத்து, தன்னம்பிக்கையுடன் தானே தோன்றி ஆடி பாடி அதகளம் செய்த அண்ணாச்சி, தற்போது தமிழ் சினிமா நாயகர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக கதாநாயகனாக அரிதாரம் பூசி அதிர்ச்சியூட்டி உள்ளார்

படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் லெஜண்ட் சரவணனின் முதல் படத்தை ஏ.வி.எம் சரவணன் , எஸ்பி முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைக்க, படபிடிப்பு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்துவருகின்றது.

நடிகர்கள் பிரபு, விவேக்,விஜய்குமார் , நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தில் கீத்திகா திவாரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகைகளை தேடி வருகின்றனர்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் பாடலை வைரமுத்து தீட்ட, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில், வேல்ராஜ் ஒளி ஓவியத்தில், விஸ்வாசம் பட எடிட்டர் ரூபன் காட்சிகளை கோர்க்கிறார்.

சென்னையில் தொடங்கி பொள்ளாச்சியில் வளர்ந்து ஹிமாலயாஸில் கொடிகட்டி பறக்க விருக்கும் அண்ணாச்சியின் இந்த படத்தை அஜீத், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் தான் இயக்க உள்ளனர்.

இந்த இருவரும் தான் சரவணனை விளம்பர படத்தில் நடிக்க வைத்து... அவரது நடிப்பு ஆசைக்கு தீனி போட்டு... திரைஉலகிற்கு இழுத்து வந்தவர்கள்... என்பது குறிப்பிடதக்கது..!

கோடிகளை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க கால் சீட் கொடுக்காமல் இழுத்தடிக்கும் கதாநாயகர்களுக்கு மத்தியில் கோடிகளை கொட்டிக் கொடுத்து படத்தில் நடிக்கும் நம்ம அண்ணாச்சி, கடை எட்டாவது வள்ளல் என்கின்றனர் தமிழ் திரை உலகினர்..!

அதற்காக குடும்பத்துடன் படம் பார்க்க போனா சேலை இலவசமாக தருவார்களா ? என்றெல்லாம் கேட்கப்படாது ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments