கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

0 6552

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இதே போல் சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வடலூர், சிதம்பரம் மற்றும் கடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments