தொடர் மழை : தேங்கியுள்ள மழை நீரில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

0 685

தமிழகத்தில் மழையால் பல ஊர்களில் விளைநிலங்கள், வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே மழை-வெள்ளம் மீட்பு, நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஊர்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த, வரதராஜபுரம் பகுதியில், கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால், பெரும்பாலான இடங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. ராயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், வீடுகளை விட்டு, வெளியில் செல்ல முடியாமல், மக்கள் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். 

சென்னை புறநகர் பகுதியான பழைய பெருங்களத்தூரில் தொடர்ந்து பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மீண்டும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. கண்ணன் தெரு முழுவதும்  மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கத்தில் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளதால் நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுவதால், நீரை வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பூலாம்பாடி ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில், நோயாளிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments