தொழிலதிபர் ராகுல் பஜாஜ்க்கு மறைமுக பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

0 691

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த தொழிலதிபர் ராகுல் பஜாஜின் கருத்துகளுக்கு, மிக நேர்த்தியாகவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்திருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் முன்னிலையில் பேசிய தொழிலதிபர் ராகுல் பஜாஜ், அரசின் கொள்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க, அதை விமர்சிக்க பலரும் அச்சப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவ்வாறு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், ஒருவேளை சகிப்புத்தன்மையின்மைக்கான சூழல் ஏற்பட்டால்,  அந்த சூழலை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதனை தனது டுவிட்டர் பதிவில் மேற்கோள்காட்டியுள்ள நிர்மலா சீதாராமன், ஒருவர் தனது சொந்த அபிப்ராயங்களை பரப்புவதை விட, தனது கேள்விகளுக்கு விடை தேட முயற்சிப்பதே சிறந்த வழியாக இருக்கும் என்றும், இல்லையேல், அது தேச நலனை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments