மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட்டின் பாகம்..!

0 697

புதுச்சேரியில் மீனவரின் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வம்பா கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மீனவர் அதிகாலை வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார்.

மீன்பிடிக்க வலையை வீசியபோது கனமான பொருள் ஒன்று சிக்கியுள்ளது. வலையை இழுக்க முடியாமல் சிவக்குமார் போராடிய நிலையில், 4 படகுகளில் சென்ற மீனவர்கள், பெரும் போராட்டத்துக்குப் பின்பு அதனை கரை அருகே இழுத்துவந்து ஜேசிபி உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர்.

பி.எஸ்.ஓ.எம்.எக்ஸ்.எல் ( PSOMXL ) என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள ராக்கெட்டின் பாகம் குறித்து ஆய்வு செய்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments